சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, மகளை கொன்றவர் கைது

Added : டிச 12, 2020
Share
Advertisement
கோட்டூர்புரம்: கோட்டூர்புரத்தில், பேராசிரியை ஒருவர் மகளுடன் இறந்து கிடந்தது தொடர்பாக விசாரித்த போலீசார், அவரது கணவரை கைது செய்தனர்.சென்னை, தரமணி, பள்ளிப்பட்டு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், கல்பனா, 36; தனியார் கல்லுாரி பேராசிரியை.கடந்த, 9ம் தேதி, கல்பனா மற்றும் அவரது, 14 வயது மூத்த மகள், உடல் அழுகிய நிலையில், வீட்டில் இறந்து கிடந்தனர். இது குறித்து, கோட்டூர்புரம்

கோட்டூர்புரம்: கோட்டூர்புரத்தில், பேராசிரியை ஒருவர் மகளுடன் இறந்து கிடந்தது தொடர்பாக விசாரித்த போலீசார், அவரது கணவரை கைது செய்தனர்.சென்னை, தரமணி, பள்ளிப்பட்டு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், கல்பனா, 36; தனியார் கல்லுாரி பேராசிரியை.கடந்த, 9ம் தேதி, கல்பனா மற்றும் அவரது, 14 வயது மூத்த மகள், உடல் அழுகிய நிலையில், வீட்டில் இறந்து கிடந்தனர். இது குறித்து, கோட்டூர்புரம் போலீசார் விசாரித்தனர்.இதில், கல்பனாவின் கணவர் கீதாகிருஷ்ணன், 53, மூன்று வயது இளைய மகளுடன் மாயமானது தெரிய வந்தது.இதையடுத்து, கீதாகிருஷ்ணனை கைது செய்து விசாரித்தனர்.இதில், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கீதாகிருஷ்ணனால், தம்பதி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து, 2ம் தேதி, குழந்தைகளுடன் தற்கொலை செய்ய, தம்பதி முடிவு செய்தது.அதன்படி, மூத்த மகளுக்கு, விஷம் கொடுத்தனர். பின், கல்பனாவும் விஷமருந்தி உள்ளார். விஷம் கொடுத்தும் மகள் இறக்காததால், தம்பதி இருவரும் சேர்ந்து, துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.பின், கல்பனா துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.திடீரென, முடிவை மாற்றிய கீதாகிருஷ்ணன், வீட்டை பூட்டி, 3 வயது மகளுடன் தப்பியது தெரியவந்தது.இதையடுத்து, சந்தேக மரணமாக பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, கீதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரது, குழந்தையை, உறவினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X