காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம் 

Added : டிச 12, 2020
Share
திருப்புவனம் : திருப்புவனம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் முகாமிடுவதால் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தற்போது நெல் நடவு செய்துள்ளனர். மழை காரணமாக பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் பயிர்களை

திருப்புவனம் : திருப்புவனம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் முகாமிடுவதால் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தற்போது நெல் நடவு செய்துள்ளனர். மழை காரணமாக பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. நெற்பயிர்களை வேருடன் பிடுங்கி விடுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களுக்குள் கூட்டம் கூட்டமாக வசிக்கும் இவைகள் இரவு நேரத்தில் வயல்களில் புகுந்து நாசம் விளைவித்து வருகின்றன. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X