மாம்பலம்: தி.நகரில், கழிவு நீர் கால்வாய் மேல் மூடி மீது, ஆட்டோ ஏறி கவிழ்ந்ததில், ஆட்டோ ஓட்டுனர், சம்பவ இடத்திலேயே பலியானார்.தி.நகர், தனியார் துணிக்கடை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்தவர், ஜெகதீசன், 48. இவர், நேற்று முன்தினம் இரவு, தி.நகர், மூப்பரப்பன் தெரு வழியாக, ஒரு பயணியுடன் ஆட்டோவில் சென்றார்.அப்போது, கழிவு நீர் கால்வாய் மேல்மூடியை கவனிக்காமல், அதன்மேல் ஆட்டோவை ஏற்றினார். இதில், ஆட்டோ கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில், ஜெகதீசனின் பின் தலையில், பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்த தகவலை தெரிவித்தனர்.ஆட்டோவில் பயணித்தவர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE