தேவகோட்டை : தேவகோட்டை வெள்ளையன் ஊரணி மேற்கு தெருவில் வசிப்பவர் ராமசிவா. 38. ஈஸ்வரி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். ராமசிவா திருப்புத்துார் மெயின்ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். மனைவியும் உதவியாக இருந்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரம் நடக்காததால் பணப்பிரச்னை ஏற்பட்டு கடன் இருந்துள்ளது.மனஉளைச்சலில் இருந்த ராமசிவா கடையை பூட்டி வீட்டிற்கு சென்றவர், மேலே உள்ள அறையில் துாக்கிட்டு இறந்தார்.ஈஸ்வரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE