பொது செய்தி

தமிழ்நாடு

துாண்டில் மீன்கள் பிடிப்பதில் ஆர்வம் 

Added : டிச 12, 2020
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் மழையால் குளங்கள் நிரம்பியதால் துாண்டில் மீன்கள் பிடிக்கப்படுகிறது. இப்பகுதி கண்மாய், குளங்களில் நீர் வற்றியதால் மீன்கள் கிடைப்பது அரிதாக காணபட்டது. தற்போது புரெவி புயலால் பலத்த மழை பெய்ததால் குளங்கள் நிரம்பியது. இதில் இளைஞர்கள் துாண்டில் மீன்களை பிடிக்க துவங்கியுள்ளனர்.மீன்களை சிக்க வைக்க வயல்களில் மண்புழுக்கள்

திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் மழையால் குளங்கள் நிரம்பியதால் துாண்டில் மீன்கள் பிடிக்கப்படுகிறது.

இப்பகுதி கண்மாய், குளங்களில் நீர் வற்றியதால் மீன்கள் கிடைப்பது அரிதாக காணபட்டது. தற்போது புரெவி புயலால் பலத்த மழை பெய்ததால் குளங்கள் நிரம்பியது. இதில் இளைஞர்கள் துாண்டில் மீன்களை பிடிக்க துவங்கியுள்ளனர்.மீன்களை சிக்க வைக்க வயல்களில் மண்புழுக்கள் சேகரிக்கபடுகிறது. இது தவிர வரத்துகால்வாய்களில் செல்லும் நீரை தேக்கி பத்தக்கட்டை மூலம் மீன்பிடிப்பதில் சிலர் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். அயிரை, கெண்டை, கெழுத்தி போன்ற பலவகையான மீன்கள் சிக்குகின்றன.இந்த வகை மீன்கள் கிலோ 350 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் நல்ல வருமானம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X