பொது செய்தி

தமிழ்நாடு

சோதனை மேல் சோதனை...போதுமடா சாமி! மூலப்பொருட்களின் விலை 'கிடுகிடு'... தொழில் நிறுவனங்கள் திணறல்

Added : டிச 12, 2020
Share
Advertisement
கோவை:இரும்பு முதல் பிளாஸ்டிக் வரை அனைத்து மூலப்பொருட்களின் விலையும் 20 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், கோவை தொழில் நிறுவனங்கள் அடுத்த கட்ட சோதனைக்கு உள்ளாகியுள்ளன.கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கொடுத்து வருகின்றன.கோவிட் -19 தொற்றால் முடங்கி கிடந்த தொழில்கள், மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

கோவை:இரும்பு முதல் பிளாஸ்டிக் வரை அனைத்து மூலப்பொருட்களின் விலையும் 20 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், கோவை தொழில் நிறுவனங்கள் அடுத்த கட்ட சோதனைக்கு உள்ளாகியுள்ளன.கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கொடுத்து வருகின்றன.
கோவிட் -19 தொற்றால் முடங்கி கிடந்த தொழில்கள், மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயலும்போது, வங்கி கடன் தவணை தொகை செலுத்த வேண்டிய நிலை வந்தது. இதோ இப்போது, மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.மூலப்பொருட்களின் விலை, 15 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், பல நிறுவனத்தினர் மூலப்பொருட்களை வாங்க இயலாத நிலையிலும், உற்பத்தி பொருளின் மீது எவ்வித விலையையும் உயர்த்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் தொழில் செய்தால் நஷ்டம் ஏற்படும் என அச்சமடைந்துள்ளனர்.கோவை தொழில் அமைப்புகளின் கூட்டு கவுன்சில் சார்பாக, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, சீமா தலைவர் கார்த்திக், கோப்மா தலைவர் மணிராஜ் உள்ளிட்டோர் இது குறித்து, நிருபர்களிடம் கூறியதாவது:ஸ்டீல், நிலக்கரி, தேனிரும்பு, சிஆர் தகடுகள், தாமிரம், பித்தளை, பாலிவினைல் குளோரைடு, அலுமினியம், பிவிசி, ஜிங்க், போன்றவற்றின் விலை, 20 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.விலை உயர்வு மட்டுமின்றி, பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் பிளாஸ்டிக் பொருட்களான பிவிசி, ஏபிஎஸ், பாலிபுரப்லீன், பிசி, பிஎப்டி போன்ற பொருட்களின் விலையும் 20 முதல் 140 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு, அரசு தடை விதிக்க வேண்டும். கோவையில் செயல்பட்டு வந்த செயில் நிறுவனத்தின் மூலப்பொருள் கிடங்கை, அரசு மீண்டும் திறக்க வேண்டும்.
சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் உதவியோடு மூலப்பொருட்களை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.விலை உயர்வு பட்டியல்(கிலோ)பொருள் முந்தைய விலை தற்போதைய விலை உயர்வு (சதவீதம்)ஸ்டீல் 37.00 54.00 40தாமிரம் 450.00 680.00 57எஸ்எஸ் ராடு 68.00 80.00 47ஸ்டீல் ராடு 49.50 67.00 35சிஆர்சிஏ ஸ்டீல் 44.00 64.50 25அலுமினியம் 145.00 166.00 15கிராப்ட் பேப்பர் 23.70 30.50 28பிவிசி ரெசின் 60.00 140.00 133ஜிங்க் 170.00 220.00 30வளர்ச்சிக்கான தடைகளை நீக்க 'போசியா' கோரிக்கைதொழில் வளர்ச்சிக்கான தடங்கல்களை நீக்குமாறு, தொழில் துறை கமிஷனரிடம் 'போசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு(போசியா) ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் உள்ளிட்டோர், தமிழக அரசின் தொழில் துறை கமிஷனர் அனு ஜார்ஜை, கோவை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, இரும்பு, தாமிரம், அலுமினியம், பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
குறுந்தொழில்களுக்கான வரம்பை தற்போதுள்ள, ரூ.25 லட்சத்தில் இருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்த, அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். 145 குறுந்தொழிற்சாலைகளின் மூலதன மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பிரச்னையில் உள்ள தடங்கல்களை நீக்கி, தொழிலகங்கள் பயன்பெற உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X