கோவை;உள்ளாட்சி பதவிகளில், 5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்துக்கு முன்வைப்பதாக, பார்வையாற்றோர் தேசிய இணையம் தெரிவித்துள்ளது.பார்வையற்றோர் தேசிய இணையம் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:அரசு கணக்கின்படி தமிழகத்தில், 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். ஆனால், அவர்களின் முன்னேற்றம் குறைவாகவே உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மீது அரசு அதிக அக்கறையும், கவனமும் செலுத்துவதாக தெரியவில்லை.வாக்காளர் பட்டியலில் கூட, நாங்கள் எத்தனைபேர் இருக்கிறோம் என குறிப்பிடப்படுவதில்லை. எனவே, வரும் தமிழக சட்டசபை தேர்தலில், 21 அம்ச கோரிக்கைகளை பல்வேறு அரசியல் கட்சியினரிடம் முன்வைக்கவுள்ளோம்.கவுன்சிலர், தலைவர் என உள்ளாட்சி பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம், வீடு, காப்பீடு, மருத்துவம் உறுதிசெய்ய வேண்டும்.சுயதொழில், தொண்டு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு மின்சார கட்டணத்தில், 25 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். மாநகராட்சி கடைகள் ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். அரசியல்வாதிகள் கண்ணோட்டத்தை பொறுத்து, எங்கள் கண்ணோட்டம் மாறுபடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE