அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சியில் புதிய பதவிகள்

Added : டிச 13, 2020
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கமல் கட்சியில், புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பெரும் உத்வேகத்துடன் பணிபுரிய வேண்டியது அவசியம். அதற்கு வலு சேர்க்கும் வகையில், மாநில அளவிலான புதிய பொறுப்புகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிதாக

சென்னை:தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கமல் கட்சியில், புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பெரும் உத்வேகத்துடன் பணிபுரிய வேண்டியது அவசியம். அதற்கு வலு சேர்க்கும் வகையில், மாநில அளவிலான புதிய பொறுப்புகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிதாக நியமிக்கப் படும் நிர்வாகிகளுக்கு, கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

சுற்றுச்சூழல் அணி, பொறியாளர் அணி, ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு அணி, தலைமை நிலைய பரப்புரையாளர், தலைமை நிலைய தரவுகள் மற்றும் ஆய்வு, மக்கள் தொடர்பாளர் என, புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.இவற்றில், பத்மப்ரியா, வைத்திஸ்வரனஜ், சையத் சயிப்புதீன், வினோத் உள்ளிட்டோர், மாநில செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X