சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மாடுகளால் பாழாகும் நிலங்கள்

Added : டிச 13, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் விவசாய பகுதியில் கரட்டு மேட்டில் மேயும் மாடுகள் இரவில் வயல்வெளியில் பயிர்கள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, மோர்க்குளம், கொம்பூதி, வேளானுார், மேலமடை, உத்திரகோசமங்கை, இதம்பாடல், பனையடியேந்தல், நல்லிருக்கை ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் சம்பா நெல்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.தற்போது

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் விவசாய பகுதியில் கரட்டு மேட்டில் மேயும் மாடுகள் இரவில் வயல்வெளியில் பயிர்கள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, மோர்க்குளம், கொம்பூதி, வேளானுார், மேலமடை, உத்திரகோசமங்கை, இதம்பாடல், பனையடியேந்தல், நல்லிருக்கை ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் சம்பா நெல்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.தற்போது மானவாரியாக நெல்சாகுபடி செய்துஉள்ளனர். இந்நிலையில் கரட்டுமாடுகள் போதிய தண்ணீர், உணவு கிடைக்காத பட்சத்தில் குடியிருப்புகள், விளைநிலங்களில் உலா வருகின்றன. தற்போது நன்றாக நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் கரட்டு மாடுகள்அவற்றை உட்கொள்ள வருகின்றன.

பயிர்களை பாழாக்கும் கரட்டு மாடுகளை விரட்ட பட்டாசு வெடித்தும், இரவு விளக்கு வெளிச்சம்,டார்ச் லைட் மூலம் விவசாயிகள்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.விவசாயி பழனிச்சாமி கூறுகையில், 'நெல்சாகுபடி ஆரம்பம் முதல் அறுவடை வரை ஒவ்வொரு ஆண்டும் கரட்டு மாடுகளால் பயிர்கள் பாழாகின்றன. அக்டோபரில் தண்ணீர் இன்றி சரியாக முளைக்கவில்லை, நவம்பர் மழையில் மீண்டும் நெல்விதைத்து தற்போது பயிராக வளர்ந்துவருகிறது.

இந்தசமயத்தில் கரட்டுமாடுகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. 2 ஏக்கரில் நெல்சாகுபடி பயிர்களை பாதுகாக்க சேலையால் வேலி அமைக்கிறோம். மாடுகளை விரட்ட சென்றால் மோத வருகின்றன.ஏற்கனவே விதைப்பு நேரத்தில் மயில்கள் தொந்தரவு இருந்தது. தற்போது கரட்டு மாடுகளால் நெற்பயிர்களை பாதுகாக்க வயலில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X