சிவகங்கை : ''காரைக்குடியில் இன்று நடக்கும் போலீஸ் எழுத்து தேர்வில் காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எஸ்.பி., ரோஹித்நாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் நடத்தும் கிரேடு 2 போலீஸ், சிறை அலுவலர், தீயணைப்பு வீரர் காலி பணியிடத்திற்கான எழுத்துதேர்வு நடக்கிறது.
சிவகங்கை மாவட்ட விண்ணப்பதாரருக்கு இன்று (டிச.,13) காரைக்குடியில் உள்ள 16 தேர்வு மையத்தில் நடக்கிறது.தேர்வுக்கு வருவோர் ஹால்டிக்கெட் உடன், போட்டோ ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவும். முகக்கவசம் அணிந்து, பேனா, பென்சில் உடன் வரவும். அலைபேசி, ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் சாதனம் எடுத்துவரக்கூடாது. காலை 8:00 முதல் 9:30 மணிக்குள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.காலை 11:00 முதல் மதியம் 12:20 மணி வரை தேர்வு எழுத முடியும். தேவையற்ற பொருளை கொண்டு வந்தால், அவற்றை பாதுகாக்க மையத்திற்குள் எவ்வித வசதியும் செய்யவில்லை.காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE