'கல்லுாரிக்கே கைவீசிட்டு போவோம்... இப்போ ஆபீசுக்கு போகும்போது மட்டும் எங்க தோள், பேக்கை சுமந்துருமா என்ன!' - உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது பாஸ்!ஆனால், ஆண்களின் ஸ்டைலிஷ் லுக்கிற்கு முக்கியமான பேஷன் ஆக்சரிசாக இப்போது பேக்குகள் மாறி விட்டதை, உலக பேஷன் வல்லுனர்களே பிராமிஸ் செய்கின்றனர். இதனால், இப்ப கிராஸ் பாடி பேக்குகள், ஆண்களுக்கான டிரெண்டிங் பேஷன் ஆக்சரிசாக மாறி விட்டது!
கிராஸ் பாடி பேக்?பெரிதாக இல்லாமல், உடலுடன் நெருக்கமாக பொருந்தக்கூடிய, பாதுகாப்பான பேக் நல்லது. கிராஸ் பாடி பேக்குகள் இதை முழுமையாக பூர்த்தி செய்யும். பருமனாக இல்லாமல்,உடலோடு ஒட்டியபடி அணியலாம்.கனமானதாக இருக்காது. ஆகவே, சவுகரியமாக அணியலாம். கிராஸ் பாடி பேக்குகளை, உடம்புக்கு முன்னாலும் அணியலாம்; பின்னாலும் அணியலாம்.
மற்ற பேக்குகளை போல், குறிப்பிட்ட நிகழ்வுக்குத்தான் அணிய வேண்டும் என்றில்லாமல், தினசரி மற்றும் ஆபீஸ், பார்ட்டி, வெக்கேஷன் என்ற பல்வேறு நிகழ்வுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.வெவ்வெறு வடிவங்களில், வண்ணங்களில், மாடல்களில் கிடைக்கும் கிராஸ் பாடி பேக்குகளில், உங்களுக்கான சரியானவற்றை தேர்ந்தெடுப்பதில்தான் மாறுகிறது உங்கள் லுக்கு!அளவுஉங்கள் பயன்பாடு மற்றும் எடுத்தும் செல்லும் பொருட்களுக்கேற்ற, சரியான அளவுள்ள கிராஸ் பாடி பேக்குகளை தேர்ந்தெடுக்கலாம்.
அதிக கனமுள்ள பொருட்களை வைத்தால், தோள்பட்டை மற்றும் முதுகில் அழுத்தம், வலியை ஏற்படுத்தும். உங்கள் பேக்குகளும் சீக்கிரம் கிழிந்துவிட வாய்ப்புள்ளது. கிராஸ் பாடி பேக்குகள், கீ, பர்ஸ், மொபைல் போன் போன்ற குட்டி, குட்டி பொருட்களை எடுத்துச் செல்ல மட்டுமே!உறுத்தாத மெட்டீரியல்கிராஸ் பாடி பேக்குகள், தினசரி பயன்பாட்டிற்கானவை. ஆகவே, நீடித்து உழைக்கும் வகையில் மெட்டீரியல்களை வாங்க வேண்டும். உயர்தர மெட்டீரியலை தேர்வு செய்யுங்கள். லெதர், மெழுகு பூசிய கேன்வாஸ் போன்ற மெட்டீரியல்கள், கிளாசிக் மற்றும் ரிச் லுக் அளிக்கும். தோலில் உறுத்தல் இல்லாமல், மிருதுவாக இருக்கும். உங்கள் பேக்குகளும் நீண்ட ஆண்டுகள் உழைக்கும்.கலரில் இருக்குது மேட்டரு!
சிலருக்கு குறிப்பிட்ட வண்ணங்கள் பொருந்தும், மற்ற வண்ணங்கள் பொருந்தாது. ஆகவே, கிராஸ் பாடி பேக்குகளிலும், சரியான நிறங்களை செலக்ட் செய்யுங்கள். லெதர், காட்டன், பேப்ரிக், மெட்டீரியலுக்கேற்ப, சாலிட் முதல் பேண்டன் வரை, டார்க் முதல் லைட் வரை பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. அலுவலகம் எனில் பிளைன், பார்ட்டி, வெக்கேசன் எனில் பேட்டர்ன்களுடன், அடர் நிறங்களில் வாங்கலாம்.இதெல்லாம் ஜஸ்ட் டிப்ஸ் மட்டும்தான். பேஷனுக்கு தனியாக வரைமுறையில்லை. உங்கள் டேஸ்ட், ஸ்டைல், தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், எந்த வகை கிராஸ் பாடி பேக்குகளையும் வாங்கலாம்... கெத்தா நடக்கலாம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE