மா.செ.,க்கள் கூட்டம் 20ல் தி.மு.க., ஏற்பாடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மா.செ.,க்கள் கூட்டம் 20ல் தி.மு.க., ஏற்பாடு

Added : டிச 13, 2020
Share
சென்னை:தி.மு.க.,வில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள் கூட்டம், வரும், 20ம் தேதி நடக்க உள்ளது.சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளதால், தேர்தல் பணிகளில், தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, மாவட்ட, மாநகர செயலர்கள்; ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள்

சென்னை:தி.மு.க.,வில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள் கூட்டம், வரும், 20ம் தேதி நடக்க உள்ளது.

சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளதால், தேர்தல் பணிகளில், தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, மாவட்ட, மாநகர செயலர்கள்; ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள, கலைஞர் அரங்கத்தில், வரும், 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது.கூட்டத்திற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தலைமை வகிக்க உள்ளார். இதில், நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X