பொது செய்தி

தமிழ்நாடு

விதவித 'கெட்டப்'பில் குவிந்த ரசிகர்கள் ரஜினியை சந்திக்க முடியாததால் ஏமாற்றம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
சென்னை:ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற, போயஸ் கார்டன் வீட்டின் முன், நேற்று குவிந்த ரசிகர்கள், அவரை சந்திக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழக சட்டசபை தேர்தலில், போட்டியிட போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி, வரும், 31ல், தன் கட்சி பெயரை அறிவிப்பதாக கூறியுள்ளார்.இந்நிலையில், நேற்று அவர், தன், 71வது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை

சென்னை:ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற, போயஸ் கார்டன் வீட்டின் முன், நேற்று குவிந்த ரசிகர்கள், அவரை சந்திக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழக சட்டசபை தேர்தலில், போட்டியிட போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி, வரும், 31ல், தன் கட்சி பெயரை அறிவிப்பதாக கூறியுள்ளார்.இந்நிலையில், நேற்று அவர், தன், 71வது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு, போயஸ் கார்டன் மீண்டும் களை கட்டியது. ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற, அவரது ரசிகர்கள் ஏராளமானோர், போயஸ் கார்டனில், ரஜினி வீட்டின் முன் நேற்று குவிந்தனர்.

பல ரசிகர்கள், அண்ணாமலை, பாட்ஷா, 2.0, அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட படங்களில், ரஜினி போட்ட கெட்டப்போடு வந்திருந்தனர்.ரஜினியை நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல வந்தவர்கள் அனைவரும், வீட்டில் ரஜினி இல்லாததை கண்டு சோகமடைந்தனர். ரஜினி நேற்று முன்தினம் இரவே, வெளியூர் சென்று விட்டதாக, அவரது வீட்டில் உள்ளோர் கூறினர்.

இதனிடையே, அவரதுபிறந்த நாளுக்காக, 11ம் தேதி நள்ளிரவு முதல், சென்னையில் பல இடங்களில் ரசிகர்கள், கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். அண்ணாநகர், வில்லிவாக்கம், வடசென்னையில், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.


முதல்வருக்கு நன்றி

ரஜினி தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளதாவது:இன்று என்னை வாழ்த்திய, முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், மத்திய, மாநில அரசியல் கட்சிகளின் நண்பர்கள், என் நலம் விரும்பிகள், சக திரைக்கலைஞர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.என் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வரும், உலகெங்கிலும் உள்ள, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என் மனமார்ந்த நன்றி.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மாற மாட்டார்களோ!

பிறந்த நாள் வாழ்த்து மற்றும் அரசியல் சார்ந்த எந்த போஸ்டர் மற்றும் பேனர்களிலும், ரஜினி படத்தை தவிர, மற்ற நிர்வாகிகள் உள்ளிட்டோரின் படங்களை பயன்படுத்த வேண்டாம் என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி, சுதாகர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். ஆனால், நேற்று கொண்டாடப்பட்ட ரஜினி பிறந்த நாளுக்காக, தமிழகம் முழுதும் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன.

குறிப்பாக, பஸ் நிறுத்தம், நிழற்குடை, தெரு பெயர் பலகை, அனுமதியில்லாத சுற்றுச்சுவர் என, எங்கு பார்த்தாலும், திராவிட கட்சியினர் பாணியில், வாழ்த்து போஸ்டர்களே இடம் பிடித்திருந்தன.'மாத்துவோம்; எல்லாத்தையும் மாத்துவோம்' என, போஸ்டரில் மட்டும் அச்சடித்த ரஜினி ரசிகர்கள்,அதை செயலிலும் காட்டினால் நன்றாக இருக்கும் என்பது, பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X