டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட ஐகோர்ட்டில் வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட ஐகோர்ட்டில் வழக்கு

Added : டிச 13, 2020
Share
சென்னை:அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர் சங்க நிர்வாகி, டாக்டர் பெருமாள் பிள்ளை, டாக்டர் நளினி உள்ளிட்ட எட்டு டாக்டர்கள், தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:மருத்துவ பணியில் நுழையும் போது, மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கும், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கும், அடிப்படை சம்பளம் ஒன்று

சென்னை:அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர் சங்க நிர்வாகி, டாக்டர் பெருமாள் பிள்ளை, டாக்டர் நளினி உள்ளிட்ட எட்டு டாக்டர்கள், தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

மருத்துவ பணியில் நுழையும் போது, மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கும், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கும், அடிப்படை சம்பளம் ஒன்று தான்.ஐந்தாம் ஆண்டில் இருந்து, சம்பள விகிதம் வேறுபட்டு, 20 ஆண்டு பணிக்காலம் முடியும் போது, இருவருக்கும் இடையே, 40 ஆயிரம் ரூபாய் சம்பள வித்தியாசம் இருக்கும். சம்பள வேறுபாட்டை தீர்க்கும்படி, நீண்ட காலமாக நாங்கள் போராடி வருகிறோம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 அக்டோபரில் போராட்டம் நடத்தினோம். பணிக்கு திரும்பும்படி அரசு கேட்டதால், போராட்டத்தை வாபஸ் பெற்றோம். அதன்பின், பழிவாங்கும் விதத்தில், 148 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.டாக்டர்கள் சிலருக்கு எதிராக, ஒரே நேரத்தில் இடமாறுதல், மெமோ என, இரட்டை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதை எதிர்த்து, சிலர் வழக்கு தொடுத்தனர்.உள்நோக்கத்துடன் மெமோ வழங்கப்பட்டு இருப்பதாகவும், அடுத்த இடமாறுதல் கவுன்சிலிங்கின் போது, பழைய பணிக்கே திருப்பி அனுப்பவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு டாக்டர்களின் கோரிக்கைக்கு தீர்வு காணும்படியும் தெரிவித்தது. சம்பள உயர்வு தொடர்பாக, 2009ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, இன்னும் அமல்படுத்தவில்லை.

இதனால், ஒவ்வொரு டாக்டரும், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் இழக்கின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், ஏழு மாதங்களாக அமல்படுத்தவில்லை.உரிய சம்பள உயர்வு; முதுநிலை படிப்பை முடிக்கும் அரசு டாக்டர்களுக்கு கவுன்சிலிங்; அரசு டாக்டர்களுக்கு, முதுநிலை படிப்பில், 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்துள்ளோம்.

எங்கள் கோரிக்கை மனு பரிசீலிக்கப்படவில்லை. மனு மீது, அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X