1,218 பேருக்கு புதிதாக தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,218 பேருக்கு புதிதாக தொற்று

Added : டிச 13, 2020
Share
சென்னை:தமிழகத்தில் நேற்று, 1,218 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. அதே நேரத்தில், அரியலுார் மாவட்டத்தில் யாருக்கும், நோய் தொற்று இல்லை.சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 228 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 72 ஆயிரத்து, 122 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில், 1,218 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.அதிகபட்சமாக, சென்னையில், 345; கோவையில்,

சென்னை:தமிழகத்தில் நேற்று, 1,218 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. அதே நேரத்தில், அரியலுார் மாவட்டத்தில் யாருக்கும், நோய் தொற்று இல்லை.

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 228 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 72 ஆயிரத்து, 122 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில், 1,218 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.அதிகபட்சமாக, சென்னையில், 345; கோவையில், 120; செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில், 72 பேர் பாதிக்கப்பட்டனர்.

அரியலுார் மாவட்டத்தில், நேற்று யாருக்கும் நோய் தொற்று உறுதியாகவில்லை. கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒருவருக்கும், பெரம்பலுார் மாவட்டத்தில் இருவருக்கும், நோய் தொற்று உறுதியானது. நேற்று எட்டு மாவட்டங்களில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் இருந்தது. சிகிச்சை பெறுவோரில் நேற்று, 1,296 பேர் குணமாகி, வீடு திரும்பினர். மொத்தம், 10 ஆயிரத்து, 208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக, நேற்று மட்டும், 13 பேர் இறந்தனர். இவர்களில், ஏழு பேர் அரசு மருத்துவமனையிலும், ஆறு பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை, 11 ஆயிரத்து, 883 பேர், கொரோனாவால் இறந்துள்ளனர்.மாநிலத்தில் இதுவரை, 7.97 லட்சம் பேருக்கு, நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில், 7.75 லட்சம் பேர் குணமடைந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X