சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கும் மட்டிக்கண்மாய்

Added : டிச 13, 2020
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஆக்கிரமிப்பு காரணமாக மட்டிக்கண்மாய் சுருங்கி வருவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். சிவபுரிபட்டி ஊராட்சி மட்டிக்கரைப்பட்டியில் உள்ள இக்கண்மாய் 335 ஏக்கர் பரப்பு கொண்டது. பாலாற்றில் இருந்து வரும் கால்வாயே நீருக்கான ஆதாரமாக இருந்தாலும் இக்கண்மாய் உள்ளேயே பரந்த நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. இக்கண்மாய் பானத்தை நம்பி 1415

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஆக்கிரமிப்பு காரணமாக மட்டிக்கண்மாய் சுருங்கி வருவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவபுரிபட்டி ஊராட்சி மட்டிக்கரைப்பட்டியில் உள்ள இக்கண்மாய் 335 ஏக்கர் பரப்பு கொண்டது. பாலாற்றில் இருந்து வரும் கால்வாயே நீருக்கான ஆதாரமாக இருந்தாலும் இக்கண்மாய் உள்ளேயே பரந்த நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. இக்கண்மாய் பானத்தை நம்பி 1415 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. தொடர் கனமழை அல்லது பாலாற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே இக்கண்மாய் நிரம்பி மறுகால் பாயும். மற்ற ஆண்டுகளில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு அப்பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்துவருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக இக்கண்மாயில் தனிநபர் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் கண்மாயில் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். சிலர் கட்டுமானங்களையும் எழுப்பியுள்ளனர். இதனால் கண்மாயின் பரப்பு குறைந்து தண்ணீர் தேங்குவது பாதிக்கிறது. கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏதுவாக 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாயின் ஒரு பகுதி ஊராட்சி மன்றத்தால் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் கருவேலமரங்கள் மட்டும் ஏலம் விடப்பட்டு வந்தது. கண்மாயை பழுது நீக்கி, புனரமைக்க நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.1.60 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.இதன் ஒரு பகுதியாக சீமைக்கருவேல மரங்களை பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்துவதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு புறம் ஆக்கிரமிப்பு, மறுபுறம் சீமைக்கருவேல மரங்கள் என மட்டிக்கண்மாய் சுருங்கி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்றி கண்மாயில் தண்ணீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X