பொது செய்தி

தமிழ்நாடு

சிறையில் சமையலர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

Added : டிச 13, 2020
Share
Advertisement
கோவை:கோவை பெண்கள் தனிச்சிறையில், காலியாகவுள்ள சமையலர் பணியிடத்தினை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட, தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணியிடத்திற்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இரண்டாண்டு முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 2018, அக்., 31ம் தேதி நிலவரப்படி, பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு மிகாதவராகவும்,

கோவை:கோவை பெண்கள் தனிச்சிறையில், காலியாகவுள்ள சமையலர் பணியிடத்தினை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட, தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணியிடத்திற்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இரண்டாண்டு முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 2018, அக்., 31ம் தேதி நிலவரப்படி, பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு மிகாதவராகவும், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர், 32 வயதுக்கு மிகாதவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.தேர்வு பெறுபவர்களுக்கு, தொகுப்பூதிய அடிப்படையில், 9,000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுடையவர்கள், மொபைல் போன் எண் குறிப்பிட்டு, அனைத்து சான்றிதழ் நகல்களுடன், கோவை பெண்கள் தனிச்சிறை கண்காணிப்பாளர் முகவரியிட்டு, 21ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில், அனுப்ப வேண்டும்.நேர்காணல் தேதி, நேரம் சார்ந்த விபரங்கள், தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் பின்பு தெரிவிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X