கோவை:கோவையிலிருந்து பிற நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை, ஆறு மாதங்களில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.கோவிட் தொற்றுக்கு பின், கோவையிலிருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதம் முதல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. டில்லி, அகமதாபாத், மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு மற்றும் ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு, கோவையில் இருந்து நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.கோவிட் தொற்றுக்குப்பின், மே மாதம் முதல் துவங்கிய, விமான போக்கு வரத்து, ஜூன் மாதத்தில் 344 விமானங்களாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 576 ஆகவும், செப்டம்பரில் 767 ஆகவும், அக்டோபரில் 899 ஆகவும் உயர்ந்தது. தற்போது நவம்பரில், 936 விமானங்களாக உயர்ந்துள்ளது. ஆறு மாதங்களில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE