சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கற்பழித்ததாக 3 பேர் மீது வழக்கு

Added : டிச 13, 2020
Share
Advertisement
சிவகங்கை : இளையான்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 கொத்தனார் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். இளையான்குடி காந்தி சாலையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் இங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். படிப்பு வராததால், கீழாயூரை சேர்ந்த கொத்தனார் முருகனுடன் 35, பரமக்குடியில்வசிக்கும் தன் தாய் வீட்டிற்கு

சிவகங்கை : இளையான்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 கொத்தனார் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.

இளையான்குடி காந்தி சாலையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் இங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். படிப்பு வராததால், கீழாயூரை சேர்ந்த கொத்தனார் முருகனுடன் 35, பரமக்குடியில்வசிக்கும் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.அந்த வீட்டில் இருந்தபடி பரமக்குடியில் ஜவுளிக்கடை வேலைக்கு சென்றார். மார்ச் 15 ம் தேதி இரவு 9:00 மணிக்கு முருகன், வீட்டில் இருந்த சிறுமியை கற்பழித்ததோடு, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.அச்சிறுமி இளையான்குடிக்கு தன் பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். சிறுமியின் மாமன் மகனான கொத்தனார் ராஜசேகர் 36, டூவீலரில்அவரை பரமக்குடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அக்கால கட்டத்தில் சிறுமியை அவரும் கற்பழித்துள்ளார். அதற்கு பின் விஷயத்தை வெளியில் சொல்லாமல், இளையான்குடியில் உள்ள பாட்டி வீட்டில் வசிக்க துவங்கினார்.இதை அறிந்த சிறுமியின் பெரியம்மா மகனானதமிழரசு 20,ம் அச்சிறுமியை கற்பழித்தார். இதனால் அச்சிறுமி 9 மாத கர்ப்பிணியானார். அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுமியை கற்பழித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 2 கொத்தனார்கள் உட்பட 3 பேர் மீது சிவகங்கை இன்ஸ்பெக்டர் மீனாபிரியா வழக்கு பதிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X