திண்டுக்கல் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பாளர் முருகேசன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் தமிழகத்தில் 5.50 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகை, அதற்கான வட்டி என ரூ.24 ஆயிரம் கோடி அரசிடம் உள்ளது.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால் 50 சதவீத தொகையான ரூ.12 ஆயிரம் கோடி அரசு கரூவூலத்திற்கு திரும்ப வந்துவிடும். மீதமுள்ள ரூ.12 ஆயிரம் கோடியை ஊழியர்களுக்கு சேமநல நிதி கணக்கு துவங்கி அதில் பற்று வைத்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் அத்தொகையை பயன்படுத்த அனுமதிக்கலாம். இதனால் அரசுக்கு உடனடி நிதி இழப்பீடு ஏற்படாது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் 10 சதவீத தொகையை அளிக்கும் அவசியம் எழாது. இதனால் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு நிதிச்சுமை குறையும்.தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும்பட்சத்தில், புதிய பங்களிப்பு திட்டத்தின் கீழ்உள்ள ரூ.24 ஆயிரம் கோடியை அரசு நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE