பொது செய்தி

தமிழ்நாடு

வெயிலால் பயணிகள் மகிழ்ச்சி

Added : டிச 13, 2020
Share
Advertisement
கொடைக்கானல், : கொடைக்கானலில் பளிச்சிடும் வெயில் நீடித்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சில வாரங்களாக புரெவி புயலால் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்தது. சுற்றுலா நகரான கொடைக்கானலில் இடைவிடாது பெய்த மழை, மேகமூட்டம், சூறைக்காற்று போன்ற காரணங்களால் வெயில் முகம் காணாதநிலை இருந்தது.இதனால் கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் இன்றி நகரே சுறுசுறுப்பில்லாமல் மந்த

கொடைக்கானல், : கொடைக்கானலில் பளிச்சிடும் வெயில் நீடித்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சில வாரங்களாக புரெவி புயலால் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்தது.

சுற்றுலா நகரான கொடைக்கானலில் இடைவிடாது பெய்த மழை, மேகமூட்டம், சூறைக்காற்று போன்ற காரணங்களால் வெயில் முகம் காணாதநிலை இருந்தது.இதனால் கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் இன்றி நகரே சுறுசுறுப்பில்லாமல் மந்த நிலையில் இருந்தது. சில தினங்களாக வானம் பளீரென சுட்டெரிக்கும் வெயில் நீடித்தது. பல்வேறு பகுதியிலிருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி, ஏரியில் படகுசவாரி, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்தனர்.வார விடுமுறை தினமான நேற்று கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

வெகு நாட்களுக்குப் பிறகு இதமான சீதோஷ்ணம் நிலவியதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X