சென்னை:அனைத்து மாவட்டங்களிலும் நடந்த, லோக் அதாலத் வாயிலாக, 22 ஆயிரத்து, 546 வழக்குகளில், 262 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
இந்த ஆண்டில், பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர், டிசம்பரில், மக்கள் நீதிமன்றம் எனப்படும், லோக் அதாலத் நடத்த, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக தலைவர், நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டிருந்தார்.கொரோனா வைரஸ் காரணமாக, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மாதங்களில், லோக் அதாலத் நடத்தப்படவில்லை.
ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பரில், லோக் அதாலத் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.உயர் நீதிமன்றம் தவிர்த்து, மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரான நீதிபதி வினீத் கோத்தாரி மேற்பார்வையில், நேற்று லோக் அதாலத் நடத்தப்பட்டது.மொத்தம், 354 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, காசோலை மோசடி, தொழிலாளர் பிரச்னை, நில ஆர்ஜிதம், ஜீவனாம்சம், விபத்து இழப்பீடு உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
மொத்தம், 22 ஆயிரத்து, 546 வழக்குகளில், 262.28 கோடி ரூபாய் அளவுக்கு தீர்வு காணப்பட்டது. இத்தகவலை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலரான, மாவட்ட நீதிபதி கே.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE