ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தாலுகா காப்பிலியபட்டியில் அம்மா நகரும் ரேஷன் கடையை அமைச்சர் சீனீவாசன்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் முருகேசன், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் பாலசுப்பிரமணி, நடராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் செல்லமுத்து, துணை தலைவர் குப்புச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ் அமுதன், மேற்கு மாவட்ட பொருளாளர் பழனிவேல், நகர செயலாளர் உதயம் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஒட்டன்சத்திரம், பழநி, தொப்பம்பட்டி பகுதிகளில் 39 நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 6357 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். இந்த நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ஒருமுறை அரசால் நிர்ணயிக்கப்பிட்ட இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE