சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' மந்திரி கடத்தல் சிக்கியவன் தப்பினான்

Added : டிச 13, 2020
Share
Advertisement
சாத்துார்:கர்நாடக முன்னாள் அமைச்சர், வர்த்துார் கடத்தல் வழக்கில் கைதானவர் தப்பினார். தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.கர்நாடகத்தை சேர்ந்தவர் வர்த்துார் பிரகாஷ், 65. இவர் சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷட்டர் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தார். நவ., 22ல், கோலார் பண்ணை வீட்டுக்கு சென்று திரும்பிய போது மர்மநபர்களால் கடத்தப்பட்டார். அவரிடம், 44 லட்சம் ரூபாய் பெற்ற

சாத்துார்:கர்நாடக முன்னாள் அமைச்சர், வர்த்துார் கடத்தல் வழக்கில் கைதானவர் தப்பினார். தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகத்தை சேர்ந்தவர் வர்த்துார் பிரகாஷ், 65. இவர் சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷட்டர் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தார். நவ., 22ல், கோலார் பண்ணை வீட்டுக்கு சென்று திரும்பிய போது மர்மநபர்களால் கடத்தப்பட்டார். அவரிடம், 44 லட்சம் ரூபாய் பெற்ற கடத்தல் கும்பல், நவ., 26ல், கோலார் பகுதியில், அவரை விட்டு சென்றது.

கோலார் ரூரல் போலீசார் எட்டு தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடினர்.தேடுதல் வேட்டையில், ரோகித் அலியாஸ் என்பவரை கைது செய்தனர். ரவிராஜ் என்பவர், விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே பதுங்கியிருந்ததை, அலைபேசி சிக்னல் வாயிலாக அறிந்தனர்.

சாத்துார் வந்த கர்நாடகா போலீசார், டோல்கேட்டில் இருந்தபடி ரோகித் மூலம் அலைபேசியில் ரவிராஜை தொடர்பு கொண்டு பேசி, அவரை அங்கு வரவழைத்தனர்.காரில் வந்த ரவிராஜ், கூட்டாளி ரோகித்துடன் தப்பினார்.- கோவில்பட்டி ரோடு ஏழாயிரம்பண்ணை அருகே சென்ற கார், வயல்பகுதி சேற்றில் சிக்கியது. விரட்டி சென்ற போலீசார் ரவிராஜை கைது செய்தனர். ரோகித் மக்காச்சோள காட்டுக்குள் ஓடி மடத்துப்பட்டி கிராமத்திற்குள் சென்று தலைமறைவானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X