கோவை:காட்டு யானை தாக்கி, இருவர் இறந்தனர்.
கோவை மாவட்ட வனச்சரகம், தொண்டாமுத்துார், வஞ்சியம்மன் கோவில் வீதி பகுதியில், நேற்று காலை, 6:00 மணிக்கு, திடீரென ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. ஆறுமுகம், 75, என்பவர், டீ கடைக்கு செல்வதற்காக, வெளியே வந்துள்ளார். அவரை யானை தும்பிக்கையால் துாக்கி வீசியது.
இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், சேரம்பாடி அருகே கண்ணம்வயல் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து, 65. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நடந்து சென்றார். நாகமுத்துவை, யானை தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஊர்மக்கள் வன அதிகாரிகளை முற்றுகையிட்டு, 'யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் உடனடியாக விரட்ட வேண்டும்' என வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE