சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு மூணாறில் போக்குவரத்து நெரிசல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு மூணாறில் போக்குவரத்து நெரிசல்

Added : டிச 13, 2020
Share
மூணாறு:கேரளா மூணாறில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்ததால் நேற்று பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கொரோனா பரவலுக்கு முன்னர் இருந்தது போல மூணாறில் தற்போது சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் அவர்களின் வாகனங்களால் மூணாறு நகர்,

மூணாறு:கேரளா மூணாறில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்ததால் நேற்று பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொரோனா பரவலுக்கு முன்னர் இருந்தது போல மூணாறில் தற்போது சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் அவர்களின் வாகனங்களால் மூணாறு நகர், மாட்டுபட்டி,எக்கோ பாய்ன்ட் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.மாட்டுப்பட்டி அணையில்படகு சவாரிக்கு நேற்று1700 பயணிகள் சென்றனர்.


மகிழ்ச்சி

கொரோனாவால் முடங்கிய சுற்றுலாவுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தங்கும் விடுதிகளில் 50 சதவீதம் கட்டணம் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. தற்போது காலை மற்றும் மாலையில் குளிருடன் இதமான காலநிலை நிலவுகிறது. பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X