விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய், வத்தல் விலை குறைந்தது. உளுந்து வகைகள் விலை உயர்ந்தன.
மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2400, நல்லெண்ணெய் ரூ.200 குறைந்து ரூ.3700. சன்பிளவர் எண்ணெய் ரூ.1900, பாமாயில் ரூ.1670 , 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.4000, 100 கிலோ சர்க்கரை ரூ.20 குறைந்து ரூ.3560, மைதா 90 கிலோ பை ரூ.3520, 55 கிலோ பொரிகடலை ரூ.70 குறைந்து ரூ.4180, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.100 அதிகரித்து ரூ.8700, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.100 குறைந்து ரூ.9400, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.7900, உளுந்து லயன் ரூ.200 அதிகரித்து ரூ.8000 விற்பனையானது.
மசூர் பருப்பு பருவட்டு ரூ.7000, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.11,000, பர்மா வகை ரூ.100 குறைந்து ரூ.9400, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.200 அதிகரித்து ரூ.9400, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.9600, பட்டாணி பருப்பு ரூ.200 குறைந்து ரூ.8100, வெள்ளை பட்டாணி ரூ.100 குறைந்து ரூ.8300, குவிண்டால் ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.1000 குறைந்து ரூ.14,000 முதல் 14,500க்கு விற்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE