சிவகங்கை:சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:
நடந்து முடிந்த மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சிறப்பான வெற்றி பெற்று முதல்வர் பழனிசாமியிடம் பாராட்டை பெற்றுள்ளோம். அதே போன்று 2021 சட்டசபை தேர்தலில் ஒற்றுமையாக இருந்து கட்சியினர் கடுமையாக உழைத்தால் தான் வெற்றி பெற முடியும்.
வரும் தேர்தலை ஒரு இக்கட்டான சூழலில் எதிர்கொள்கிறோம். இந்த முறை வெற்றி பெற்று விட்டால், தி.மு.க., மட்டுமல்ல வேறு எந்த சக்தியாலும் அ.தி.மு.க.,வை அசைக்கவே முடியாது. வரும் தேர்தலில் அ.தி.மு.க., வினர் கடுமையாகவும், ஒற்றுமையாகவும் உழைத்து, அதிக ஓட்டுக்களை பெற்று மீண்டும் அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர செய்ய வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE