மதுரை : எட்டையாபுரம் ராஜகோபால் 87. ஓய்வுபெற்ற தலைமையாசிரியர். வயது முதிர்வால் பற்கள் அனைத்தும் விழுந்தன மதுரை சொக்கிக்குளம் நளா பல் மருத்துவமனை டாக்டர் கண்ணபெருமானை சந்தித்தார்.
ஐரோப்பிய தொழில்நுட்ப முறையில் இம்பிளான்ட்கள் வைத்து அதன்மேல் நிரந்தர செராமிக் பற்கள் பொருத்த முடிவு செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ராஜகோபால் 32 பற்கள் தெரிய சிரிக்கிறார்.டாக்டர் கண்ணபெருமான் கூறுகையில், ''இம்பிளான்ட் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை. வயதானால் பொக்கை வாய் ஏற்படும் என்பது தவறு. வயதானவர் களுக்கு உடலுக்கேற்ற உணவை சாப்பிட பலமான பற்கள் அவசியம். பல் கட்டும் நவீன தொழில்நுட்பத்தில் பலமான செராமிக் பற்களை பொருத்த முடியும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE