மனைவி கொலை: கணவர் சரண்மதுரை: பெத்தானியாபுரம் வேலாயுதம் 52. பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவிஅஞ்சனாதேவி 44, நடத்தை மீது சந்தேகப்பட்டு நேற்று முன்தினம் இரவு கிரைண்டர் கல்லை தலையில் மீது போட்டு கொலை செய்தார். பின் கரிமேடு போலீசாரிடம் சரணடைந்தார்.மனஅழுத்தத்தால் தற்கொலைமதுரை: கே.கே.நகர் ஆண்ட்ரூ ஆரோக்கிய ஆனந்த் 36. பொன்னம்மராவதியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். கடன்தொல்லை, பணிச்சூழலால் மனஅழுத்தத்திற்குள்ளாகி வீட்டில்துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலையில் 6 பேர் கைதுசெக்கானுாரணி: பன்னியான் செந்தில் 38. பிரபல கொள்ளையன் தார்பாய் முருகனின் குழுவில் இருந்தவர். டிச.,9ல் கூட்டாளிகளுடன் பன்னியான்விலக்கில் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டார். டி.எஸ்.பி., ராஜன், இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதி பரமன் 51, காசி 24, விஸ்வநாதன் 36, சுரேந்திரன் 21, ரவிக்குமார் 34, அஜீத்குமார் 26, முத்துமாயன் 42, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE