பொது செய்தி

தமிழ்நாடு

' ரூ.56,541 கோடி பயிர்கடன்'

Added : டிச 13, 2020
Share
Advertisement
மதுரை : ''கடந்த 2011 முதல் 2020 அக்., 31 வரை ஒரு கோடியே ஒரு லட்சத்து75 ஆயிரத்து 629 விவசாயிகளுக்கு ரூ.56,541 கோடியில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது'' என மதுரையில் ரூ.76.90 லட்சத்தில் 566 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார். அவர் பேசியதாவது: மேற்கு தொகுதியில் ரோடு, குடிநீர், மின்விளக்கு வசதிகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. மாடக்குளம் கண்மாயில் ரூ.85

மதுரை : ''கடந்த 2011 முதல் 2020 அக்., 31 வரை ஒரு கோடியே ஒரு லட்சத்து75 ஆயிரத்து 629 விவசாயிகளுக்கு ரூ.56,541 கோடியில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது'' என மதுரையில் ரூ.76.90 லட்சத்தில் 566 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.

அவர் பேசியதாவது: மேற்கு தொகுதியில் ரோடு, குடிநீர், மின்விளக்கு வசதிகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. மாடக்குளம் கண்மாயில் ரூ.85 லட்சத்தில் குடிமராமத்து பணி நடந்தது. சர்க்கரை ரேஷன்கார்டுதாரர்கள் டிச., 20 வரை அரிசி கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். மாநிலத்தில் 3501 நகரும் அம்மா ரேஷன்கடைகள் செயல்படுகின்றன. 2017-18 முதல் 2020 டிச., வரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 743 பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க ரூ.632.80 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

2011 முதல் 2020 வரை 27 லட்சத்து 26 ஆயிரத்து 992 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.மாநகராட்சி கமிஷனர் விசாகன், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், தாசில்தார்கள் முத்துவிஜயகுமார், நாகராஜன், பாண்டி, மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X