சென்னை : ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து வெளியேற்றி, மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்துள்ளார். மனுவுக்கு, பிரசாத் லேப் நிர்வாகம் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில், ஒலிப்பதிவு கூடம் உள்ளது. இதை, 35 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி வந்தார். இடத்தை காலி செய்யும்படி, இளையராஜாவிடம் பிரசாத் லேப் நிர்வாகம் கேட்டது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு சமரச பேச்சு நடந்தது. இந்நிலையில், ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும், இடையூறு செய்வதற்கு தடை விதிக்கவும், உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்தார்.
![]()
|
மன உளைச்சல்ஏற்படுத்தியதற்காக, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரியிருந்தார். இவ்வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது.இளையராஜா சார்பில்,மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''ஒலிப்பதிவு கூடத்தில் உள்ள, அவருக்கு சொந்தமான பொருட்களை எடுப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை,'' என்றார்.மனுவுக்கு பதில் அளிக்க, பிரசாத் லேப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும், 17ம் தேதிக்கு, நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE