ஜன., 21 வரை மூடப்படும் கனடா-அமெரிக்கா எல்லை; கனடா பிரதமர் அறிவிப்பு

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020
Share
Advertisement
உலகின் மிக நீண்ட இரு நாட்டு எல்லைப்பகுதியான கனடா-அமெரிக்கா எல்லை வரும் ஜனவரி 21-ஆம் தேதிவரை மூடப்படுவதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.கடந்த வெள்ளியன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இரு நாடுகளும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் உயிர்களை பலி

உலகின் மிக நீண்ட இரு நாட்டு எல்லைப்பகுதியான கனடா-அமெரிக்கா எல்லை வரும் ஜனவரி 21-ஆம் தேதிவரை மூடப்படுவதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.



latest tamil news



கடந்த வெள்ளியன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இரு நாடுகளும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கர்கள் கனடா வருவதால் கனடாவிலும் வைரஸ் வீரியம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது எனத் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் கனடா-அமெரிக்கா எல்லை மூடப்பட்டது. வைரஸின் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் எல்லையைத் திறக்கலாமா வேண்டாமா என்று இருநாட்டு அரசுகளும் பரிசீலித்தன. அத்தியாவசிய பொருட்கள், வர்த்தக வாகனங்கள் உள்ளிட்டவை தவிர வேறு எந்த தனியார் வாகனங்களுக்கு இருநாட்டு எல்லையிலும் அனுமதி மறுக்கப்பட்டது.


latest tamil news



கனடாவில் துவக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் அதன் இரண்டாவது அலையில் வீரியத்தை அதிகரிக்கத் துவங்கியது. கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம்பேர் இரண்டாம் அலையால் புதியதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அண்டை நாடான மெக்சிகோவுக்கு அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லை ஜனவரி 21 வரை மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோ-அமெரிக்கா- கனடா ஆகிய மூன்று நாடுகளின் வர்த்தகம் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க 3 நாட்டு அரசுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X