மதுரை:'தொழில்நுட்பத்தில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசால் தமிழகத்தை சிங்கப்பூர், மலேசியா போன்று மாற்ற முடியும்' என ம.நீ.ம., பொதுச்செயலாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ் பாபு தெரிவித்தார்.
அவர் அளித்த சிறப்பு பேட்டி: அரசியல் தலைவர்கள் நேர்மையாக இருந்தால் கட்சி நேர்மையாகும். கமல் மிகவும் நேர்மையானவர். எதையும் உன்னிப்பாக கவனிப்பவர். எனவே தான் அவர் கட்சியில் சேர்ந்தேன்.
அரசுத் துறையில் பணியாற்றும்போது பாரத் நெட் போன்ற பல திட்டங்கள் என்னிடம் இருந்தன. இவை தமிழகத்தை முற்றாக மாற்றக்கூடியவை. அனைத்து வீடுகளுக்கும் இணைய சேவை கிடைத்திருக்கும். கிராமங்களிலும் நகருக்கு இணையான வசதிகள், தொழில்நுட்பங்கள் கிடைத்திருக்கும்.பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் தமிழக இளைஞர்கள் தான் தொழில் நுட்பத்தில் கொடிகட்டி பறக்கின்றனர்.
ஆனால் இவர்களை நமது மாநில அரசு பயன்படுத்த தவறுகிறது. தொழில்நுட்பத்தில் அரசிடம் தொலைநோக்கு பார்வை இல்லை. இப்பார்வை இருந்தால் தமிழகம் சிங்கப்பூர், மலேசியா போன்று மாறி இருக்கும். அரசுப் பணியில் இருந்து மாற்றத்தை உண்டு பண்ண முடியாது என்ற சூழலில் தான் அரசியலுக்கு வந்தேன்.
நேர்மையான இக்கட்சியை வளர்க்க வேண்டியது எனது கடமை. தேர்தலில் போட்டியிடுவதை விட உறுப்பினர்களை அதிகம் சேர்க்க ஆர்வம் காட்டுகிறேன். இயற்கை பேரிடர்கள் வரும்போது மட்டும் நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிட்டு, நிரந்தர தீர்வு காண்பதில் அரசு வெற்றி பெற வேண்டும், என்றார்.சந்தோஷ் பாபு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE