கோவை:கோவையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.இதுகுறித்து, கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, ஈச்சனாரி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. போத்தனூர் ஆதரவற்றோர் ஹோமில் உள்ள குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்கப்பட்டது. 200 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.குறிச்சி, குனியமுத்துார் பகுதியில், 71 மரக்கன்றுகள் நடப்பட்டன. மாச்சம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு, பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டன. சித்தாபுதுார் அரிபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.அன்னூர்:
தென்னம்பாளையம் ரோட்டில், மன்ற நிர்வாகி சந்திரன், 50 பேருக்கு வேட்டி, சட்டையும், நூறு பேருக்கு, அன்னதானமும் வழங்கினார்.ஒன்றியத்தில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், ரசிகர்கள் ரஜினியின் படத்தை வைத்து, பாபா முத்திரையை கையில் காண்பித்தபடி, 'வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க' என்கிற கோஷமிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE