மாவட்டத்தில் ஜூன், ஜூலையில் தாண்டவமாடிய கொரோனா, பின்னர் படிப்படியாக குறைந்தது. தினசரி பாதிப்பு 100 கீழ் வந்ததால் நிம்மதி ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு 30 தொட்டது. தீபாவளி பண்டிகை கூட்டத்தால் பாதிப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்டது.நல்லவேளையாக அப்படி எதுவும் நேரவில்லை. மாறாக, தீபாவளிக்கு முந்தைய இருவாரம் 36 ஆக இருந்த சராசரி பாதிப்பு, அடுத்த இருவாரத்தில் 27 ஆக குறைந்தது. இது மதுரையில் கொரோனா கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் கடைசி 5 நாள் பாதிப்பு புதிய புயலை கிளப்பி இருக்கிறது. திடீரென டிச.,7ல் பாதிப்பு 42 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் 50ஐ தொட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. நேற்று 41 ஆக இருந்தது. கடைசி 6 நாளில் மட்டும் 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சராசரி பாதிப்பு 35 ஆகும். இதுவே அதற்கு முந்தைய 5 நாட்களில் பாதித்தோர் எண்ணிக்கை 123 தான். சராசரியாக 24 பேரை வைரஸ் தாக்கி இருக்கிறது. 6 நாட்களில் நிலைமை மாறி இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடைசி 6 நாட்களில் கொரோனா பாதிப்பு உயர்வதற்கு மூவர் காரணம். சிங்கப்பூர், அமெரிக்கா, திருப்பூர் பகுதியில் இருந்து வந்த இவர்களுக்கு தொற்று உறுதியானது. இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கொத்தாக பாதிக்கப்பட்டனர். இது தான் திடீர் உயர்விற்கு காரணம். எனவே பயப்பட வேண்டாம். முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE