பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் நியமனத்தில் தாமதம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:தேர்தல் கமிஷனிடம் இருந்து, அனுமதி கிடைக்காததால், ஊத்துக்குளி தாசில்தார் நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது.ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த முரளி, உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்து வருவதால், தாசில்தார் பணியிட

திருப்பூர்:தேர்தல் கமிஷனிடம் இருந்து, அனுமதி கிடைக்காததால், ஊத்துக்குளி தாசில்தார் நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது.ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த முரளி, உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்து வருவதால், தாசில்தார் பணியிட மாற்றத்தில், கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. புதிய தாசில்தாரை பணியமர்த்த, தேர்தல் கமிஷனில் அனுமதி பெற வேண்டும்.'தாசில்தார் நியமனம் தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், அனுமதிகோரி கடிதம் அனுப்பியுள்ளது; அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், ஊத்துக்குளி தாசில்தார் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என, வருவாய் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X