மதுரை : தேசிய 'லோக் அதாலத்' மதுரை நீதிமன்றத்தில் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி (கூடுதல் பொறுப்பு) மதுசூதனன் தலைமை வகித்தார். சிவில், கிரிமினல், விபத்து, வங்கிகள், பராமரிப்புத் தொகை தொடர்பாக 2429 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.
1046 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரச தீர்வு ஏற்பட்டது. ரூ.9 கோடியே 63 லட்சத்து 56 ஆயிரத்து 395 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. நீதிபதிகள் கிருபாகரன் மதுரம், பத்மநாபன், சுமதி, வடிவேல், சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா பங்கேற்றனர்.திருமங்கலம்திருமங்கலம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் நடந்தது. நீதிபதிகள் ஜான் சுந்தர்லால் சுரேஷ், அருண், பாரதி, ரேணுகாதேவி கலந்து கொண்டனர். ரூ. 43 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE