பொது செய்தி

தமிழ்நாடு

டிச.25ல் சொர்க்கவாசல் திறப்பு

Added : டிச 13, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் உதவிகமிஷனர் ராமசாமி தெரிவித்துள்ளதாவது: இக்கோயிலில் தனுர் மாத நிகழ்ச்சிகள் டிச.,16 முதல் ஜன.,13 வரை நடக்கிறது.தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கும். அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடக்கும். காலை 11:30 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8:00 மணிக்கு

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் உதவிகமிஷனர் ராமசாமி தெரிவித்துள்ளதாவது:

இக்கோயிலில் தனுர் மாத நிகழ்ச்சிகள் டிச.,16 முதல் ஜன.,13 வரை நடக்கிறது.தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கும். அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடக்கும். காலை 11:30 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8:00 மணிக்கு சாத்தப்படும்.டிச.,15ல் வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவங்குகிறது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிச.,25 மாலை 4:00 மணிக்கு நடக்கிறது என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X