பொது செய்தி

தமிழ்நாடு

நிறுவனத்தின் கடன் மறுசீரமைப்பு : வழிகாட்டும் தொழில் பாதுகாப்பு குழு

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழுவினர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் மறுசீரமைப்புக்கு உதவுகின்றனர்.கொரோனா பரவலை தடுப்பதற்காக, கடந்த மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நாடுமுழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கொரோனா பாதிப்பிலிருந்து நிறுவனங்கள் மீள்வதற்காக, மத்திய அரசு சிறப்பு

திருப்பூர்:திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழுவினர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் மறுசீரமைப்புக்கு உதவுகின்றனர்.கொரோனா பரவலை தடுப்பதற்காக, கடந்த மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நாடுமுழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கொரோனா பாதிப்பிலிருந்து நிறுவனங்கள் மீள்வதற்காக, மத்திய அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆக., மாதம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கடன்களை மறு சீரமைப்பு செய்துகொள்ள வாய்ப்பு அளித்து அறிவிப்பு வெளியிட்டது.திருப்பூரில் ஆடை உற்பத்தி துறை சார்ந்து,குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. இந்நிறுவனங்கள் கடன்களை மறு சீரமைப்பு செய்ய, தொழில் பாதுகாப்புக்குழு வழிகாட்டுகிறது.இதுகுறித்து, தொழில்பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கி கடன்களை மறு சீரமைப்பு செய்து கொள்ள ரிசர்வ் வங்கி வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, நிறுவனங்கள், தங்கள் கடன்களை திருப்பி செலுத்த உரிய தவணை தொகை, தவணைகளின் எண்ணிக்கை, கடன் தவ ணைக்கான காலம் ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்துகொள்ளமுடியும்.நிறுவனங்கள், தாங்கள் கடன் பெற்றுள்ள வங்கியை அணுகி, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெறும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் தொகை, 25 கோடி ரூபாய்க்குள் இருக்கவேண்டும். கடந்த மார்ச் 31ம் தேதியன்று, கடன் நிலை, 'ஸ்டேன்டர்டு' என்கிற வகைப்பாட்டில் இருக்கவேண்டும். ஜி.எஸ்.டி., பதிவு கட்டாயம்.நிறுவனங்கள் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கான அறிக்கை தயாரிப்பதற்கு, 'சிட்பி' உடன் தொழில் பாதுகாப்புக்குழு உதவிவருகிறது. திருப்பூர் பகுதி ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், மறு சீரமைப்பு சார்ந்த ஆவண தயாரிப்புக்கு, தொழில்பாதுகாப்புக்குழுவை அணுகி, பயன்பெறலாம்.விவரங்களுக்கு, 87450 50005 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X