பொது செய்தி

தமிழ்நாடு

'கிராம வளர்ச்சி களப்பணிக்கு 'அட்வைஸ்'

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:'கிராமப்புற வளர்ச்சிக்கு, அதிகாரிகளின் களப்பணி அவசியம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை தீவிரப் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:கிராமப்புறங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதார உயர்வுக்கான கட்டமைப்பு வசதிகளை

திருப்பூர்:'கிராமப்புற வளர்ச்சிக்கு, அதிகாரிகளின் களப்பணி அவசியம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை தீவிரப் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:கிராமப்புறங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதார உயர்வுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக துறை அலுவலர்கள், களப்பணி மேற்கொள்ள வேண்டும்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர்கள் கொண்ட குழு அமைத்து, தங்கள் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.கிராமங்களில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உட் பட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம். இதற்கு களப்பணிதான் கைகொடுக்கும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X