நெகிழி இல்லா பல்லடம் புகார் தெரிவிக்க அழைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நெகிழி இல்லா பல்லடம்' புகார் தெரிவிக்க அழைப்பு

Added : டிச 13, 2020
Share
பல்லடம்;'நெகிழி இல்லா பல்லடம்' உருவாக்கும் முயற்சியாக, நகராட்சி நிர்வாகம் 'வாட்ஸ் அப்' மூலம் புகார் தெரிவிக்கலாம்,' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு எதிராக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சமூக அக்கறையுடன் நெகிழி பைகளில்

பல்லடம்;'நெகிழி இல்லா பல்லடம்' உருவாக்கும் முயற்சியாக, நகராட்சி நிர்வாகம் 'வாட்ஸ் அப்' மூலம் புகார் தெரிவிக்கலாம்,' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு எதிராக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சமூக அக்கறையுடன் நெகிழி பைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் மறுக்க முன் வரவேண்டும்.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நுாறு சதவீதம் செயல்படுத்த, பல்லடம் நகராட்சி பகுதியில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், சில வியாபாரிகள் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விற்று வருகின்றனர்.'நெகிழி இல்லா பல்லடம்' உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் குப்பை கொட்ட கட்டுப்பாடு விதித்து வருகிறோம். வியாபாரிகளும், பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு தரவேண்டியது அவசியம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ, 94430 95762 என்றால் 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X