விழுப்புரம்:'நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியலை, இந்து மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது' என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
இந்து மக்கள் கட்சியின் ஆன்மிக அரசியல் மாவட்ட மாநாடு, விழுப்புரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற, கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:நாங்கள், நடிகர் ரஜினி காந்தின் ஆன்மிக அரசியலை முழுமையாக ஆதரிக்கிறோம்.
எங்கள் கட்சியை நிச்சயமாக இணைக்க மாட்டோம். 234 தொகுதிகளிலும் ரஜினிக்கு பக்க பலமாக இருப்போம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்ற அற்புதத்தை நிகழ்த்துவோம். தமிழகத்தில் லஞ்ச, ஊழல், சாராய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஆன்மிகத்திற்கு மதம் கிடையாது.மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்து வித வசதிகளை கொடுப்பதுதான் ஆன்மிக அரசியல்.
இதை நடிகர் ரஜினி ஏற்படுத்தித் தருவார்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை இந்து மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இச்சட்டத்தை உள்நோக்கோடு காங்கிரஸ் எதிர்த்து போராட்டத்தைத் துண்டுகிறது.இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE