பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கால நோய் கைகொடுக்கும் சித்த மருந்து

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்,:கொரோனா தடுப்புக்கு, கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்தா மருந்து பெரிதும் உதவின. இதேபோல், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில், சித்த மருத்துவத்தை கடைபிடித்தவர்கள் பெரும்பாலானோர், அதிலிருந்து மீளவும் செய்தனர். இதன் மூலம், சித்த மருத்துவத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்தது.மழைக்காலமான தற்போது, பல்வேறு நோய்களில் இருந்து விடுபடவும் சித்த மருந்துகள்

திருப்பூர்,:கொரோனா தடுப்புக்கு, கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்தா மருந்து பெரிதும் உதவின. இதேபோல், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில், சித்த மருத்துவத்தை கடைபிடித்தவர்கள் பெரும்பாலானோர், அதிலிருந்து மீளவும் செய்தனர். இதன் மூலம், சித்த மருத்துவத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்தது.மழைக்காலமான தற்போது, பல்வேறு நோய்களில் இருந்து விடுபடவும் சித்த மருந்துகள் கைகொடுக்கின்றன.சித்த மருத்துவர்கள் கூறியதாவது:பருவ மழைக்காலங்களில் உருவாகும் நோய்களில் இருந்து, தற்காத்து கொள்வதற்கு, சித்த மருத்துவத்தில், சிறந்த மருந்துகள் உள்ளன. சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் உள்ளவர்கள், தாளிசாதி சூரணம், சுவாச குடோரி மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும். நிமோனியா, டைபாய்டு, டெங்கு, சிக்குன் குனியா, கொரோனா போன்றவற்றுக்கு நிலவேம்பு, கபசுர சூரணத்தை காய்ச்சி வடிகட்டி அருந்தி வர வேண்டும்.இந்த வகை சித்த மருந்து, அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் சித்தா பிரிவுகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ளும் போது, அதை எடுத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், அறிவுரைகளை சித்த மருத்துவர்கள் வழங்குவர். பொதுவாக சளி, இருமல், உடல்வலி போன்றவற்றில் இருந்து விடுபட வெந்நீர் பருகுவது அவசியம். காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை நன்கு கழுவி சமைத்து உண்ண வேண்டும்.இதய நோயாளிகள், இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டோர், குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்கலாம். மழைக்காலங்களில், பதப்படுத்தப்பட்ட அனைத்துவகை உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X