திருப்பூர்:'விபத்தில்லா பயணம்' மேற்கொள்வதற்கான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளன.ஊரடங்கால் விபத்துகள் குறைந்திருந்தன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, விபத்துகள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. பொது போக்குவரத்து அதிகரித்ததையடுத்து, தொடர் விபத்துகள் நடக்கின்றன.அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும், 'விபத்தில்லா பயணம்' என்ற நிலையை உருவாக்க, அலுவலர்கள் முன்வர வேண்டும். வட்டார போக்குவரத்து மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, அதிக விபத்து ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு விபத்துகள் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகள் மற்றும் யுத்திகள் கையாளப்பட வேண்டும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE