பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாயை ஆக்கிரமிக்க போட்டி!

Added : டிச 13, 2020
Share
Advertisement
பணி முடியும் முன்பே அத்துமீறல்திருப்பூர், டிச. 13-ஈஸ்வரன் கோவில் வீதியில், கால்வாய் கட்டும் பணி நிறைவு பெறும் முன்பே, அதன்மீது கடைகள் முளைக்க துவங்கியுள்ளன.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஸ்மார்ட் ரோடு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. அவ்வகையில், ஈஸ்வரன் கோவில் வீதியில், பூ மார்க்கெட் முதல்
 கால்வாயை ஆக்கிரமிக்க போட்டி!

பணி முடியும் முன்பே அத்துமீறல்

திருப்பூர், டிச. 13-

ஈஸ்வரன் கோவில் வீதியில், கால்வாய் கட்டும் பணி நிறைவு பெறும் முன்பே, அதன்மீது கடைகள் முளைக்க துவங்கியுள்ளன.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஸ்மார்ட் ரோடு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. அவ்வகையில், ஈஸ்வரன் கோவில் வீதியில், பூ மார்க்கெட் முதல் ஈஸ்வரன் கோவில் வழியாக நொய்யல் ஆறு சென்று சேரும் வகையில், பெரியளவில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.ஈஸ்வரன் கோவில் வீதியில், வடிகால் கட்டும் பணி மட்டும் நிறைவடைந்துள்ளது. இணைப்பு வடிகால் உள்ளிட்ட பணிகள் நிறைவடையவில்லை; புதிய ரோடு அமைக்கும் பணியும் இன்னும் துவங்கவில்லை.இந்நிலையில், கால்வாய் கட்டுமானம் மீது, கடைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கட்டுமானப்பணி நடந்து வரும் நிலையில், இந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. கடைகளுக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், கால்வாய் கட்டுமானத்தை நடைபாதையாக பயன்படுத்துகின்றனர். இதுபோன்று கடைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் ரோட்டில் இறங்கி நடக்க வேண்டியுள்ளது. துவக்கத்திலேயே ஆக்கிரமிப்பை தவிர்க்க, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், கட்டுமானப்பணியின் நோக்கம் வீணாகிவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X