பொது செய்தி

தமிழ்நாடு

ேபாலீஸ் தேர்வு மையம்: கமிஷனர் திடீர் ஆய்வு

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், போலீஸ் எழுத்து தேர்வு நடக்க உள்ள மையத்தை, கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால், இரண்டாம்நிலை காவலர், தீயணைப்போர் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு, திருப்பூரில் இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதற்காக, ஐந்து தேர்வு மையங்கள், தயார்படுத்தப்பட்டுள்ளன.குமார்நகரில் உள்ள

திருப்பூர்:திருப்பூரில், போலீஸ் எழுத்து தேர்வு நடக்க உள்ள மையத்தை, கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால், இரண்டாம்நிலை காவலர், தீயணைப்போர் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு, திருப்பூரில் இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதற்காக, ஐந்து தேர்வு மையங்கள், தயார்படுத்தப்பட்டுள்ளன.குமார்நகரில் உள்ள பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில், திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், நேற்று ஆய்வு மேற்கொண்டார். எஸ்.பி., திஷா மிட்டல், துணை கமிஷனர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.தேர்வெழுத வருவோர், தங்கள் அசல் அடையாள சான்றிதழ் ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும். எந்தவொரு எலக்ட்ரானிக் பொருட்களையும் உடன் கொண்டு வரக்கூடாது. தேர்வு எழுதும் நபர்கள், தேர்வு மையம் வரும் போது, முக கவசம், கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X