பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்கடன்; அடமான கடன்! வேறுபாடுகளை புரிந்து செயல்படுவது அவசியம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
ரியல் எஸ்டேட் துறையில் சந்தை நிலவரம் மாறிவரும் சூழலில், சொத்துக்களை வாங்குவோர் அதற்கான மொத்த தொகையையும் கையில் வைத்திருப்பது சாத்தியமில்லை. இதற்காக பெரும்பாலானோர் வங்கிகளின் கடன் திட்டங்களையே நம்பியுள்ளனர்.திருப்பி செலுத்தக்கூடிய உங்கள் திறனை வைத்தே வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானிக்கும். அதாவது உங்கள் மாதாந்திர வருமானத்தில் இருந்து உங்கள் தேவைகள் போக,
 வீட்டுக்கடன்; அடமான கடன்! வேறுபாடுகளை புரிந்து செயல்படுவது அவசியம்

ரியல் எஸ்டேட் துறையில் சந்தை நிலவரம் மாறிவரும் சூழலில், சொத்துக்களை வாங்குவோர் அதற்கான மொத்த தொகையையும் கையில் வைத்திருப்பது சாத்தியமில்லை. இதற்காக பெரும்பாலானோர் வங்கிகளின் கடன் திட்டங்களையே நம்பியுள்ளனர்.திருப்பி செலுத்தக்கூடிய உங்கள் திறனை வைத்தே வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானிக்கும். அதாவது உங்கள் மாதாந்திர வருமானத்தில் இருந்து உங்கள் தேவைகள் போக, மிஞ்சும் பணத்தை வைத்தே உங்களால் எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை வங்கிகள் கணக்கிடும். கணவன், மனைவி இருவரும் பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் வீட்டுக் கடன் தகுதி அதிகமாக இருக்கும்.இதில் உங்கள் தேவை என்ன, அதற்கு எத்தகைய கடன் வசதி சரியான தீர்வாக இருக்கும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். வாங்க இருக்கும் சொத்தின் மதிப்பில் குறிப்பிட்ட அளவு தொகை மட்டுமே வைத்துள்ளவர்கள், மீதி தொகையை வீட்டுக்கடன் வாயிலாக பெறலாம்.இதற்கு மாத தவணையை செலுத்தக் கூடிய வகையில் அவர் வருவாய் ஆதாரம் காட்ட வேண்டும். இத்தகைய சூழலில் இருப்பவர்களுக்கு வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கும். வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இருந்தால், வங்கி உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.அதே நேரத்தில், பலரும் இதை அடமானக்கடன் போன்று நினைக்கின்றனர். வீட்டுக்கடன்களுக்கு வங்கிகள், 8.5 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியை கணக்கிடும். இதே வட்டியில் அடமானக் கடன் வழங்கப்படமாட்டாது. வீட்டுக்கடன்களுக்கான சலுகை வேறு அடமான கடன்களுக்கான நடைமுறை வேறு என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.வீட்டுக்கடன் புதிய, பழைய வீட்டை வாங்க வழங்கப்படும் வசதி. ஆனால், ஏற்கனவே வாங்கிய மனையில், புதிய வீடு கட்ட திட்டமிடுவோர், அந்த மனை பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறுவது அடமானக் கடன் எனப்படும். இதற்கான வட்டி 10 சதவீதத்துக்கு மேல் இருக்கும்.அடமான கடன் பெறுவோர், மாத தவணை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்யலாம். வட்டியை அதிகமாக செலுத்துவதா, அதில் அசல் தொகையின் அளவை அதிகரிப்பதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அடமான கடன் தொகைக்கு உங்கள் மனை பத்திரம், வங்கியில் ஈடாக வைக்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.கவனமாக இருக்கணும்!ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவது அல்லது குறைக்கப்படுவதைப் பொறுத்து மாறும் தன்மை உடையது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முழுக் காலத்துக்கும் ஒரே அளவு மாதத் தவணை (இ.எம்.ஐ.) இருக்காது.அடமான கடன் ஏற்கனவே கடன் வாங்கிய சொத்துக்களுக்கு எதிராக வாங்கப்படுகிறது வீட்டுக் கடன் ஒரு சொத்து அல்லது பாதுகாப்பை உருவாக்க எடுக்கும்போது, இது எல்லாவற்றிற்கும் வீட்டு வசதி வங்கியின் நோக்கத்திற்கு உதவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X