பொது செய்தி

தமிழ்நாடு

கட்டடங்களில் குறைபாடு காட்டி கொடுக்கும்

Added : டிச 13, 2020
Share
Advertisement
மிகப் பழமையான பல கட்டடங்கள் இன்னும் ஸ்திரமாக நிற்கின்றன. புதிதாக கட்டிய பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்படுகிறது.'கட்டி முடித்து 20 ஆண்டுகளாகியும், கல்லாக நிற்கிறது' என கட்டடத்தை பார்த்து பெருமைப்பட்டு கொள்வோர் நம்மில் பலரும் இருக்கின்றனர். இவ்வாறு, பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு சிறந்த கட்டடம் இருப்பது பலருக்கும் வியப்பாக
 கட்டடங்களில் குறைபாடு காட்டி கொடுக்கும்

மிகப் பழமையான பல கட்டடங்கள் இன்னும் ஸ்திரமாக நிற்கின்றன. புதிதாக கட்டிய பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்படுகிறது.'கட்டி முடித்து 20 ஆண்டுகளாகியும், கல்லாக நிற்கிறது' என கட்டடத்தை பார்த்து பெருமைப்பட்டு கொள்வோர் நம்மில் பலரும் இருக்கின்றனர். இவ்வாறு, பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு சிறந்த கட்டடம் இருப்பது பலருக்கும் வியப்பாக இருக்கலாம்.ஏனெனில், புதிதாக கட்டிய பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்படுகிறது. உண்மையில் விதிகளை சரியாக கடைப்பிடித்து, தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டடங்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும்.ஆனால், இதில் ஏதாவது ஒரு நிலையில், குறைபாடு நிகழ்ந்தால், கட்டடத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும்.கட்டடங்களில் குறைபாடு இருப்பதை, நீர்க்கசிவு தான் காட்டிக் கொடுக்கும். இது சாதாரண நாட்களில் தெரிய வராது. மழைக்காலங்களில் தான் நீர்க்கசிவு பிரச்னைகள் வாயிலாக குறைபாடு தெரிய வரும். துவக்கத்தில் சுவர்களில் சிறிய கோடாகத் தெரிய வரும் விரிசல்கள் நாளடைவில் விரிவடையும் போது ஒட்டு மொத்த கட்டுமானமும் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.கட்டடங்களில் விரிசல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதற்காக நீர்க்கசிவு ஏற்படுவதை நல்லது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் கட்டிய அல்லது வாங்கிய கட்டடத்தை 10 ஆண்டுக்கு ஒருமுறை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.கான்கிரீட் கம்பிகள், நீர்க்கசிவு பிரச்னையை எதிர்கொள்ளாதபடி பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு வீட்டின் மாடி தளம் நீர் தேங்காத வகையில் அமைக்கப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் மாடியின் தரைத் தளம் வழியே நீர் ஊடுருவி கான்கிரீட் கம்பிகளை துருப்பிடிக்கச் செய்து விடும். அதன் காரணமாக மேற்கூரையில் விரிசல் ஏற்படக் கூடும்.கட்டட அமைப்பியல் பொறியாளர்கள் உதவியுடன், கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதில் கட்டடத்தின் துாண்கள், பீம்கள், சுவர்கள், தளம், இணைப்பு பகுதிகள் ஆகியவற்றில் மாதிரிகள் எடுத்து சோதனை செய்ய வேண்டும்.இதன் ஆய்வில், கட்டடத்தின் உறுதி தன்மையின் உண்மை நிலவரம் தெரிய வரும். இது தவிர, ஒவ்வொரு மழைக்காலத்துக்கு முன், பின் இத்தகைய ஆய்வு அவசியம். கட்டடங்களின் மேல் பகுதியில், தளங்கள், பால்கனி அல்லது போர்டிகோ பகுதிகளுக்கான உயரம் குறைந்த தளங்கள், ஜன்னல் சன்ேஷட் உள்ளிட்ட பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளது.இந்த பகுதிகளில் விழும் மழை நீர், உடனடியாக கட்டடத்திலிருந்து வெளியேறுவதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும். மழைநீர் வெளியேறும் பகுதிகளில் எந்த அடைப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என கட்டுமானத் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.கவனிக்க வேண்டியவை... கட்டுமானப் பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமல் போவது கட்டட விரிசலுக்கு முதன்மை காரணியாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிமென்ட் மணல் கலவை சரியான விகிதத்தில் கலத்திருக்க வேண்டும். கட்டுமானப் பணிக்கு ஏற்ப அதன் அளவுகளில் மாற்றம் இருக்க வேண்டியது அவசியம். அதாவது சுவர் கட்டுமானம், பூச்சு வேலை என பணிகளின் தன்மைக்கேற்ப கலவை முறை அமைய வேண்டும். பூச்சு வேலைகளின் போதும், தண்ணீர் அளவை கவனிக்க வேண்டும். சரியான விகிதத்தில், தண்ணீர் கலந்து, சிமென்ட் கலவையை உருவாக்க வேண்டும். அதை விடுத்து நீரை உறிஞ்சும் தன்மையில் பூச்சு வேலை அமைந்து விடக்கூடாது. அது சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். சுவர்களை, பருவ காலத்திற்கு ஏற்ப பராமரிக்க வேண்டும். அதிலும் குளிர் காலத்தில் நீர்க் கசிவு பிரச்னை சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதற்கு காற்றில் கலக்கும் ஈரப்பதமும் காரணமாக இருக்கும். அதற்கேற்ப பராமரிப்பு அமைய வேண்டும். முக்கியமாக வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கு பூசப்படும் வண்ணங்கள், நீர் கசிவைத் தடுக்கும் வகையில் அமைய வேண்டும். அதற்கேற்ப பெயின்டிங் வகைகளை தேர்வு செய்து பூசுவது பலன் தரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X