போத்தனுார்:கோவை செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடுவேயில், ஜே.கே.டயர் மற்றும் எப்.எம்.எஸ்.சி.ஐ.,யின், 23வது தேசிய சாம்பியனுக்கான கார் பந்தயம் நடந்தது.
எல்.ஜி.பி., 'பார்முலா - 4' பிரிவில் நடந்த முதல் போட்டியில், விஷ்ணுபிரசாத், சந்தீப் குமார் மற்றும் அஸ்வின் தத்தா முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.'நோவிஸ் கோப்பை'க்கான முதல் போட்டியில், அமிர் சையது, அமான் சவுத்ரி, துருவின்கஜ்ஜார் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.இரண்டாவது போட்டியில், அமிர் சையது முதலிடத்தையும், துருவ் தியாகி, விஜய் ஆதித்யா அடுத்த இரண்டு இடங்களையும் வென்றனர்.
எல்.ஜி.பி.,பார்முலா - 4 பிரிவில் நடந்த இரண்டாவது போட்டியில், அஸ்வின் தத்தா, ராகுல் ரங்கசாமி மற்றும் விஷ்ணுபிரசாத், முதல் மூன்று இடங்களை வென்றனர்.மூன்றாவது போட்டியின் துவக்க இடத்திலேயே அஸ்வின் தத்தாவை பின்னுக்கு தள்ளிய ராகுல் ரங்கசாமி, ஒவ்வொரு சுற்றுகளையும் அதிவேகத்தில் கடந்தார். எதிர்பாராவிதமாக, வாகனத்தில் பழுது ஏற்பட்டு, பின்னடைவை சந்தித்தார்.
இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட விஷ்ணுபிரசாத், முதலிடத்திற்கு வந்து, கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.இருவருக்கும் இடையே, 150 மீட்டர் இடைவெளி இருந்தது. கடைசி மூன்று சுற்றுகள் இருந்த நிலையில், ஒரு வீரரின் வாகனம் பழுதானதால், பாதுகாப்பு கார் முன் செல்ல வீரர்கள் சுற்றினை தொடர்ந்தனர். கடைசி சுற்றில் பாதுகாப்பு கார் விலகியது.
இதை தனக்கு சாதகமாக்கிய அஸ்வின் தத்தா மின்னல் வேகத்தில் செயல்பட்டு, முதலிடத்தை பிடித்தார். விஷ்ணுபிரசாத், சரோஷ் ஹட்டாரியா அடுத்த இரு இடங்களை கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பை வழங்கப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக, பார்வையாளர்கள் இல்லாமல், பந்தயங்கள் நடந்தன. இன்று போட்டிகள் நிறைவடைகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE